ரசிகர்கள் என்னை மறக்கவில்லை – இலியானா !

ஒரு சர்வேயில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, பிரீத்தி ஜிந்தா ஆகியோரை விட என்னைத்தான் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகமாக தேடி உள்ளனர். சில மாதங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தபோதும் ரசிகர்கள் என்னை மறக்காமல் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. 10 ஆண்டு சினிமா வாழ்க்கை பயணத்தில் எத்தனையோ வெற்றிகள் கிடைத்தது. ஐந்தாறு ஆண்டுகள் தொடர்ந்து தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தேன். அதன்பிறகு இந்திக்கு போனேன். சினிமாவில் வெற்றி என்பது முக்கியம். நான் சினிமாவில் இருக்கிறேனா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளாமல் சமூக வலைத்தளத்தில் ஏராளமானோர் பின் தொடர்வது ஆச்சரியமாக உள்ளது. இதை பார்த்து பெருமை பட்டுக்கொண்டு உட்கார்ந்து இருந்தால் பயன்இல்லை. ஒவ்வொரு படத்தையும் முதல் படம் மாதிரி நினைத்து பயந்து பயந்து நடிக்கிறேன். எல்லா படங்களிலும் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது இவ்வாறு இலியானா கூறினார்.