ரஜினிகாந்தின் ‘மன்னன்’ பட ரீமேக்கா? – MR.லோக்கல் !

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்–நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. ‘நடுத்தர குடும்பத்தை சேர்ந்த குறும்புத்தனமான இளைஞனுக்கும் ஒரு நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருக்கும் பெண்ணுக்கும் இடையிலான மோதலும் காதலும்தான் மிஸ்டர் லோக்கல் படத்தின் கதை. இந்த படம் ரஜினிகாந்தின் மன்னன் படத்தின் ரீமேக் என்று பேசுகிறார்கள். மன்னன் ரீமேக் இல்லை. ஆனாலும் அந்த படத்தில் இருந்த நாயகன், நாயகி மோதல் மிஸ்டர் லோக்கல் படத்தில் இருக்கும். இது முழுக்க நகைச்சுவை படம். யோகிபாபு, ரோபோ சங்கர், சதீஷ் ஆகியோர் நகைச்சுவை காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளனர்.