ரஜினிகாந்தை கிண்டல் செய்த இலங்கை கிரிக்கெட் வீரர்!

ரஜினிகாந்த் உலகம் முழுவதும் தெரிந்த ஒரு உச்ச நடிகர். இவர் நடிப்பில் இந்த பொங்கலுக்கு 'பேட்ட' படம் திரைக்கு வரவிருக்கிறது இந்நிலையில் ரஜினிகாந்த் நீண்ட வருடங்களாக அரசியலுக்கு வருவதாக கூறிக்கொண்டே தான் இருக்கின்றார். கட்சி தொடங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஒருவருடம் ஆகின்றது, ஆனால் தற்போது வரை அவர் வரவில்லை. இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ‘இந்தியாவில் ரஜினிகாந்த் சொல்வது போல் வருவேன், வருவேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் பழக்கம் எனக்கு இல்லை. நான் அரசியலுக்கு வரமாட்டேன்’ என்று அவர் கூறியுள்ளார். இது ரஜினி ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.