ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்குகிறது!
ரஜினிகாந்த் ‘2.0’ படத்துக்கு பிறகு ‘பேட்ட’ படத்தில் நடித்தார். இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வசூல் பார்த்துள்ளது. அடுத்து அரசியல் கட்சியை தொடங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார், சில மாதங்களாக திரைக்கதையை உருவாக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. படப்பிடிப்பை மார்ச் மாதம் இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். தொடர்ச்சியாக 3 மாதங்கள் இதன் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொள்கிறார். இதர நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. ரஜினிகாந்த் நடிக்க உள்ள படம் முழு அரசியல் கதையாக இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்காமல் ஒதுங்கி இருப்பதும் அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதும் ரஜினிகாந்த் திட்டமாக உள்ளது அதனால், கட்சி தொடங்குவதை அவர் தள்ளிவைத்து இருப்பதாக கூறப்படுகிறது.