ரஜினிகாந்த் லதா: 3 மாதங்களுக்குள் கடன் திருப்பி கொடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…..

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “அனிமேஷன் கோச்சடையான்” படத்தை அவரின் மகள் சௌந்தர்யா இயக்கினார். இந்த படத்திற்காக ஆட் பீரோ என்ற நிறுவனத்திடம் அவரின் மனைவி லதா 10 கோடி ரூபாய் கடன் வாங்கி 1.5 கோடி ரூபாய் மட்டுமே திரும்பி கொடுத்தார். ஆனால் மீதி பணமான 8.5 கோடி ரூபாயை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து லதா ரஜினியின் வக்கீலிடம் விளக்கம் கேட்கப்பட்டு நிலுவைத் தொகையான 6.2 கோடியை 3 மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.