ரஜினிக்கு “ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி” விருது – கமல் வாழ்த்து !

கோவா சர்வதேச திரைப்பட விழாவின் 50-வது ஆண்டு விழா, நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு “ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி” விருது வழங்கப்படும் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்து இருப்பதை பல்வேறு தரப்பினரும் வரவேற்று, அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.           இந்நிலையில் சிறப்பு விருது பெற உள்ள நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.