ரஜினிக்கு ஐகோர்ட் நோட்டிஸ் அனுப்ப உத்தரவு.

நடிகர் ரஜினி, இயக்குனர் கஸ்தூரிராஜா ஆகியோர் மீது பிரபல பைனான்சியர் முகுன்சந்த் போத்ரா புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவரும்,இவரது மகனும் ஏற்கனவே மிரட்டி பணம் பறித்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள். ரஜினியை அவர் மிரட்டுவதாக புகார் கூறியுள்ளார். இதனால் ரஜினி தன் மீதுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யுமாறு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இதனை ஏற்ற ஐகோர்ட் வழக்கை தள்ளுபடி செய்தது. தற்போது போத்ரா, ரஜினி தன் மீது அவதூறு புகார் கூறியதாக வழக்கு தொடர்திருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள், ஜனவரி 25ம் தேதிக்குள் ரஜினி பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.