ரஜினிக்கு வில்லன் ஆகும் ஏமி ஜாக்சனின் முன்னாள் காதலர்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் படம் தர்பார். படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் ரஜினிக்கு வில்லன் யார் என்பது தெரிய வந்துள்ளது. பாலிவுட் நடிகர் ராஜ் பாபர், மறைந்த நடிகை ஸ்மிதா பாட்டீலின் மகனும், நடிகருமான ப்ரதீக் பாபர் தான் தர்பார் படத்தில் வில்லனாக நடிக்கிறார். தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிப்பதை உறுதி செய்துள்ளார் ப்ரதீக் பாபர். இந்த வாரமே அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இது தான் ப்ரதீக் நடிக்கும் முதல் தமிழ் படம் என்பதும், முதல் படமே ரஜினி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.