ரஜினியிடம் ஆட்டோகிராப் வாங்கிய தாசில்தார்…

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து “ரஜினி மக்கள் மன்றம்” தொடங்கி உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. கட்சி பெயரை அறிவிக்கும் ஏற்பாடுகளும் நடந்து வரும் நிலையில் அவர் ஆன்மிக பயணமாக இமயமலை சென்று அங்கு உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமம் உட்பட பல்வேறு தளங்களுக்கு சென்று வழிபடுவதில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் அவரிடம் அவரது ரசிகர்கள் ஆட்டோகிராப், மற்றும் செல்பி எடுத்து கொள்கின்றனர். இதற்கு அவரும் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் போஸ் கொடுத்துள்ளார். இதில் “ஜம்முகாஷ்மிர் மாநிலத்தில் உள்ள பென்னி பகுதியின் தாசில்தார் ரமேஷ் தனது சட்டையில் ஆட்டோகிராப் போடும்படி கேட்டார் அதற்கு அவர் “இங்கேயா” என்று சிரித்தபடி கேட்டுக்கொண்டு சட்டையில் ஆட்டோகிராப் போட்டு தந்தார். அந்த சட்டையை அந்த தாசில்தார் துவைக்காமல் பத்திரப்படுத்தி வைத்திருப்பதாக கூறியுள்ளார்” இந்த சம்பவம் இணையதளத்தில் பரவிவருகிறது.