ரஜினியிடம் தனது ஆசை தெரிவித்த நிவேதா தாமஸ் !

இப்போதைக்கு மகள் நடிகையாக வலம்வரும் நிவேதா தாமஸ் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழியிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் கதாநாயகியாக நடித்த போராளி, சரஸ்வதி சபதம் போன்ற படங்கள் பெரிதளவில் வெற்றியயவில்லை. எனவே தனது பாதையை மாற்றி பாபநாசம் படத்தில் கமலுக்கும், ஜில்லா படத்தில் மோகன் லாலுக்கும் தற்போது ரிலீசாகி இருக்கும் தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்துள்ளார். இப்படங்கள் மூலம் ஓரளவிற்கு பேசப்படுகிறார். இந்நிலையில் தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்த அனுபவம் பற்றி அவர் தெரிவித்தது, சூப்பர் ஸ்டார் தன்னை மகளாகவே நடத்தினார். ஒரு நாள் அவருக்கு சமைத்து தரவேண்டுமென்பது என் ஆசை. எனது ஆசையை அவரிடம் தெரிவித்தேன் அவரும் சம்மதித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் நான் சினிமா உலகில் மேன்மேலும் உயர்ந்து நல்ல நடிகை என்ற பெயர் வாங்கவேண்டுமென்பது தனது ஆசையாக கூறுகிறார் நிவேதா தாமஸ்.