ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி!

ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா, தொழில் அதிபர் விசாகனை 2-வது திருமணம் செய்துகொள்கிறார். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். சவுந்தர்யாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து, கருத்து வேறுபாடு காரணமாக 2 வருடங்களுக்கு முன்பு கணவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். இவருக்கு வேத் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில், சவுந்தர்யாவுக்கு தொழில் அதிபர் விசாகன் என்பவருடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது. விசாகன் அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்துள்ளார். இவர் தொழில் அதிபர் வணங்காமுடியின் மகன். ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். தயாரிப்பு நிறுவனம் மற்றும் மருந்து கம்பெனியும் நடத்துகிறார்.சௌந்தர்யா-விசாகன் திருமணம் வருகிற 11-ந் தேதி காலை 9 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. இந்த நிலையில், சவுந்தர்யா-விசாகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. ரஜினிகாந்தும், அவரது மனைவி லதாவும் இதில் கலந்து கொண்டனர். உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பலர் இதில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.இந்தத் திருமண வரவேற்பில் கலந்து கொண்டவர்களுக்கு, விதைப்பந்தை அன்பளிப்பாக அளித்துள்ளனர் ரஜினிகாந்தும் லதாவும். அந்த விதைப்பந்தில் உள்ளது எந்த மரத்தின் விதைகள் என்ற தகவலும் அதில் இடம்பெற்றுள்ளது. பொதுவாக, திருமணத்துக்கு வந்து வாழ்த்துபவர்களுக்குத் தாம்பூலப்பை கொடுப்பதுதான் வழக்கம். ரஜினி வித்தியாசமாக விதைப்பந்து கொடுத்து விருந்தினர்களை அசத்தியுள்ளார்.