ரஜினியின் காலா தலைப்புக்கு புதிய சிக்கல் – பஞ்சாயத்து ஆரம்பிச்சிருச்சி!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து பா.ரஞ்சித் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்திற்கு 'காலா' என பெயரிட்டு, First Look போஸ்டர்கள் வெளியானபோது இணையமே அதிர்ந்தது.இந்த நிலையில் காலா என்ற தலைப்புக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. அந்த தலைப்பை யாரோ ஒரு தயாரிப்பாளர் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ளாராம், அது தெரியாமல் அந்த தலைப்பை வைத்துவிட்டனர்.

அந்த தயாரிப்பாளரிடமிருந்து காலா டைட்டிலை வாங்க தற்போது, தயாரிப்பாளர் தனுஷ் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.