ரஜினியின் காலா படத்தின் உண்மையான பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'காலா' படத்தில் நடித்து வருகிறார். கபாலி படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைகிறது. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. பட்ஜெட் 100 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், படத்தின் உண்மையான பட்ஜெட் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 160 கோடி ருபாய் பட்ஜெட்டில் காலா உருவாகி வருவதாக அதிகாரபூர்வமாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹுமா குரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.