ரஜினியின் காலா, 2.0 படங்கள் ஏப்ரல் மாதத்தில் வெளியீடு…

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.0 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் திட்டமிட்டபடி முடியாததினால் அந்த படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிட்டனர். இதனால் கடந்த வாரம் ஊடகத்தில் பரபரப்பான செய்திகள் நிலவி தற்போது அந்த செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளியாகும் ஏப்ரல் 27ம் தேதி அன்று பா.ரஞ்சித் இயக்கிய “காலா” படத்தை வெளியிடுவதாக தயாரிப்பாளர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படம் குறுக்கே வந்ததால், திரு இயக்கத்தில், ஜி.தனஞ்ஜெயன் தயாரிக்கும் “மிஸ்டர் சந்திரமெளலி” என்ற படத்தில் கார்த்திக்கும், அவரது மகன் கெளதம் கார்த்திக் இணைந்து நடித்து வருகின்ற படம் வெளியிடும் தேதியை தள்ளி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.