Cine Bits
ரஜினியின் 164-வது படம் “காலா – கரிகாலன்”

தனுஷ் தயாரிப்பில், ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கு காலா – கரிகாலன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.இது ரஜினி நடிக்கும் 164-வது படமாகும். படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் கூடிய தலைப்பை இன்று அறிவிப்பதாக நேற்று தனுஷ் அறிவித்திருந்தார். அதன்படி இன்று(மே 25-ம் தேதி) காலை 10 மணிக்கு தனுஷ், தனது டுவிட்டரில் ரஜினியின் 164-வது படத்தின் தலைப்பை வெளியிட்டார்.