ரஜினியை தொடர்ந்து விஜய்க்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி !

நடிகர் விஜய் தனது  64-வது திரைப்படத்தில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைக்கோர்க்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் 3-ந் தேதி தொடங்க உள்ளது. 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு இத்திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் 64-வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும் இது தொடர்பாக படத்தின் இயக்குனர் விஜய் சேதுபதியை அணுகியதாக கூறப்பட்டது. விஜய் சேதுபதி தளபதி 64 படத்திற்காக கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டிசம்பர் மாதம் விஜய் சேதுபதி இப்படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என கூறப்படுகிறது. இந்த தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லனாக “பேட்ட” திரைப்படத்தில்  விஜய் சேதுபதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.