ரஜினியை பழிவாங்கும் கதாபாத்திரத்தில் குஷ்பூ !

குஷ்பூ ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் தற்போது வில்லியாக நடிக்கவிருக்கிறார். ரஜினிகாந்த் ‘தர்பார்’ படத்துக்கு பிறகு சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 168-வது படம். இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 3 கதாநாயகிகள் நடிக்கின்றனர். சித்தார்த், பிரகாஷ் ராஜ், சூரி ஆகியோரும் உள்ளனர். கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சத்தில் தயாராவதாக கூறப்பட்டது. ரஜினிகாந்த் 2 பெண்டாட்டிக்காரராக நடிப்பதாகவும், குஷ்புவும், மீனாவும் மனைவிகளாக வருகிறார்கள் என்றும் வலைத்தளத்தில் பதிவிட்டனர். தற்போது குஷ்பு வில்லி வேடத்தில் நடிக்கிறார் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் மனைவியாக வரும் குஷ்பு, அவருடன் சண்டை போட்டு தனியாக பிரிந்து செல்கிறார். அதன்பிறகு மீனாவை ரஜினி 2-வது திருமணம் செய்து கொள்கிறார். இது குஷ்புவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. ரஜினியை பழிவாங்கும் வேலையில் இறங்குகிறார். ரஜினிக்கு எதிரிகளாக இருக்கும் வில்லன்களும் குஷ்புவுக்கு உதவுகிறார்கள். அதில் அவர் வென்றாரா? என்பது கதை என்று தகவல் பரவி வருகிறது. இதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. மன்னவன், வியூகம், அண்ணாத்த ஆகிய பெயர்களை பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் முடிந்துள்ளது.