ரஜினி கமல் கூட்டணி அமைத்தால் வரவேற்கத்தக்கது – அக்‌ஷரா ஹாசன் !

நடிகையும், கமல்ஹாசனின் மகளுமான அக்‌ஷரா ஹாசன் சென்னையில் நேற்று தமிழ் இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அப்பா கமல், ரஜினி இருவரும்  நெருங்கிய நண்பர்கள். தொடக்கம் முதலே சேர்ந்து பயணித்தவர்கள். எனவே ரஜினியுடன் அப்பா (கமல்) அரசியலில் கூட்டணி அமைத்தால் மகிழ்ச்சி. ரஜினி சார் வந்தாலும் ஓ.கே, வராவிட்டாலும் ஓ.கே.தான். அவர்கள் இணைய வேண்டும் என்பதில் விருப்பம் உண்டு. பெண்கள் எவ்வித சூழலையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும். உங்களை ஒருவர் தவறாக அழைத்தால் அவரிடம் முடியாது என்று தைரியமாக சொல்ல வேண்டும். எதிர்த்து நின்று போராட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.