ரஜினி திடீரென ஐந்து நாள் பயணமாக இமயமலை சென்றார்!

புது கட்சி துவங்கும் பணியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் ரஜினி திடீரென்று நேற்று மாலை இமயமலை பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த வருடம் காலா படம் முடித்தவுடன் இமயமலை சென்றார். திரும்பி வந்து பேட்ட, அதை தொடர்ந்து தர்பார் படத்திலும் நடித்தார். தர்பார் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் இமயமலை செல்ல திட்டமிட்டிருந்தார். தற்சமயம் சென்னையிலிருந்து மும்பை சென்று அங்கிருந்து டேராடூன் செல்கிறார். அடுத்த ஆண்டு ஏப்ரலில் கட்சி தொடங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட உள்ளதால் இப்பொழுதே இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஆனால அந்த முடிவில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது, வரும் 2021ல், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆறு மாதத்திற்கு முன் கட்சி துவக்கி தேர்தலை சந்திக்கலாம் என அவருடைய அரசியல் ஆலோசகர்கள் கூறியுள்ளனர்.