ரஜினி தெளிவாக இருக்கிறார் – விவேக்!

எத்தனை மெகா கூட்டணி அமைந்தாலும் அனைவரும் பொதுமக்கள் என்ற மகா சக்தி முன்புதான் கூட்டணி வைத்துள்ளனர். பொதுமக்கள் என்கிற சக்தி தீர்மானிப்பவர்கள் தான் ஆட்சிக்கு வர முடியும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். கூட்டணி வைக்கலாம். ஆனால் முடிவு மக்கள் கையில் தான் இருக்கிறது. ரஜினி பின்வாங்கவில்லை அவர் முதலில் இருந்தே சட்டமன்ற தேர்தலில் தான் நிற்க போகிறேன் என சொன்னார். அதில் தெளிவாக இருக்கிறார். வரும் தேர்தல் முடிவை கணிக்க முடியவில்லை. இதுவும் சுவாரசியமாக இருக்கிறது. எல்லோரையும் போல நானும் மக்கள் முடிவை எதிர்பார்க்கிறேன்.