ரஜினி மகள் சௌந்தர்யாவின் வரவேற்பு நிகழ்ச்சி!

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும்-தொழில் அதிபருமான விசாகனுக்கும் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையோடு சவுந்தர்யா விசாகன் தனது புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். திருமணத்தன்று சவுந்தர்யா சந்தீப் கோஸ்லா டிசைனர் புடவை அணிந்திருந்தார். அவருக்கு மேக்கப் போட்டு, சிகை அலங்காரம் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த விழாவில் பலரையும் கவர்ந்த இன்னொரு அம்சம், சவுந்தர்யா தனது மகன் வேத்-துக்கு கொடுத்த முக்கியத்துவம்! திருமணம் தொடர்பாக அவர் வெளியிட்ட புகைப்படங்கள், செய்திகள் அனைத்திலும் வேத், விசாகன், சவுந்தர்யா ஆகிய 3 பெயர்களையும் ஹேஷ்டேக்காக இணைத்தார்.