ரஜினி, விஜய் முகம் திரையில் வந்தாலே படம் வசூல் அள்ளும் – முன்னணி பாலிவுட் இயக்குனர் ஓபன் டாக்!

தென்னிந்திய சினிமா தற்போது பாலிவுட்டிற்கே சவால் விடும்படி வளர்ந்துவிட்டது. அந்த வகையில் கமர்ஷியல் படம் எடுப்பதில் வல்லவரான ரோஹித் ஷெட்டி சமீபத்தில் தென்னிந்திய சினிமா குறித்து பேசியுள்ளார். இதில் வட இந்திய படங்கள் எத்தனை பெரிய ஸ்டாராக இருந்தாலும் படம் நன்றாக இல்லை என்றால் ஓடவே ஓடாது. ஆனால், தென்னிந்தியாவில் குறிப்பாக ரஜினி, விஜய், அல்லு அர்ஜுன் படங்கள் நன்றாக இல்லை என்றாலும் அவர்கள் திரையில் வந்தாலே மூன்று நாளைக்கு வசூல் சூப்பராக இருக்கும். அந்த அளவிற்கு அவர்களின் ரசிகர்கள் பலம் அதிகம் என கூறியுள்ளார்.