ரன்வீர் சிங்யின் ஆசை.

ரன்வீர் சிங் நடித்த பத்மாவத் படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டும்,பாராட்டப்பட்டும்  வருகிறது.இந்நிலையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவரிடம் ஆங்கில மொழி படங்களில் நடிக்க ஆசை உள்ளதா என கேட்ட போது அதற்கு ஆங்கில மொழியில் நடிக்க விருப்பம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.நான் அமெரிக்க பள்ளியில் படிக்கும் போது ஆங்கில வழியில் தான்  படித்தேன். அதனால் எனது இன்னொரு மொழியான ஆங்கிலத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். ஆங்கில படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தபோது சில காரணங்களால் அவற்றை நடிக்க முடியாமல் போனது. ஆனால் சரியான நேரம் வரும் போது, சரியான படத்தில் நல்லதொரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவேன் என நினைக்கிறேன் என்றார். தற்போது அவர் குல்லி பாய் ,சிம்பா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.