Cine Bits
ரன்வீர் சிங் “கல்லி பாய்” படம் அடுத்த ஆண்டு காதலர் தினமன்று வெளியீடு….

ரன்வீர் சிங் பத்மாவத் படத்திற்கு பிறகு “கல்லி பாய்” “சிம்பா” படங்களில் நடித்து வருகிறார். கல்லி பாய் படம் நவத் சாகிக் மற்றும் விவான் பெர்ணான்டஸ் ஆகியோரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகிறது. இந்த படம் ராப் பாடகர்களின் பின்னணியில் உருவாகிறது. இதில் இவர் மற்றும் ஆலியா பட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் மும்பையில் சேரி பகுதியில் வாழும் ராப் பாடகர்களாக நடித்துள்ளனர். இந்த படம் 2019 ம் ஆண்டு பிப்ரவரி 14 ம் தேதி வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.