ரவி வர்மாவின் ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த தமிழ் நடிகைகள் !

கேரளா மாநிலத்திலுள்ள கிளி மண்ணூரை சேர்ந்தவர் ஓவியர் ரவி வர்மா. இவரை பற்றி அறிந்திடாதவர் எவரும் இல்லை. ஐரோப்பிய நுட்ப கலையை இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு மாற்றி படைப்பதில் இவருக்கு நிகர் இவரே. பெண்களை மையமாக வைத்து ஓவியங்களை தீட்டுவதில் இவர் கைதேர்ந்தவர். கல்வி கடவுளான சரஸ்வதி தேவியின் உருவத்தை முதன்முதலில் வரைந்தவர் இவரே. இந்நிலையில் இவரின் ஓவியத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக புகழ் பெற்ற புகைப்பட வல்லுநர் வெங்கட்ராம் ரவிவர்மாவின் ஓவியங்களை ரீகிரியேட் செய்யும் வகையில் நம் தமிழ் நடிகைகளை வைத்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதில் நடிகைகள் குஷ்பூ, ஸ்ருதி ஹாசன், சமந்தா, ரம்யாகிருஷ்ணன், ஷோபனா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த புகைப்படங்கள் தான் தற்சமயம் இணையத்தை கலக்கி வருகிறது.