ரவுடி பேபி பாடலின் மேக்கிங் வீடியோ!

ரவுடி பேபி பாடல் யூடியூபில் 25 கோடிக்கும் மேற்பட்ட முறை பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரவுடி பேபி பாடலின் மேக்கிங் வீடியோவை இன்று வெளியிட்டுள்ளனர். தனுஷ் பட பாடலுக்கு கோரியோகிராப் செய்ய வேண்டும் என்று கேட்டதுமே பிரபுதேவா ஒத்துக் கொண்டதாக பாலாஜி மோகன் தெரிவித்துள்ளார். பாடலை கேட்காமலேயே ஒப்புக் கொண்டாராம் பிரபு தேவா. ரவுடி பேபி பாடலுக்கு பிரபுதேவாவின் நடனம் மிகப் பெரிய பலம். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் அந்த பாடலுக்கு பெரிய பலமாக அமைந்தது.