ராகவா லாரன்ஸிற்கு கை கொடுத்த பேய் !The devil handed over to Raghava Laurens

தமிழில் வெளியான முதல் பார்ட் 4 திரைப்படம் என்ற பெருமையையும், இரண்டாவது பார்ட் 3 என்ற திரைப்படம் என்ற பெருமையையும், ராகவா லாரன்ஸின், காஞ்சனா -3 முனி 4 திரைப்படம் பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான காஞ்சனா 3, முதல் நாளிலேயே ரூ.10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரே மாதிரி கதையம்சம் கொண்ட திரைப்படங்களை ரசிகர்கள் வரவேற்காத நிலையில், காஞ்சனா திரைப்படம் அதற்கு விதிவிலக்கு. முதல் முதலில் தொடங்கி வைத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, இந்த தொடர்ச்சி திரைப்பட பாணி, ராகவா லாரன்ஸிற்கு மட்டும் அமோகமாக கை கொடுக்கிறது. முனி பட வரிசையில் வெளியான மூன்று படங்களும் வெற்றிப்படமாக அமைந்த நிலையில், இந்த படமும் வெற்றிப்படமாகவே அமைந்துள்ளது.