ராகவா லாரன்ஸை பாராட்டிய கலாநிதிமாறன்!

முனி படத்தின் தொடர்ச்சியாக காஞ்சனா 3 படம் உருவாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் இந்தப் படத்தை அவரே தயாரித்தும் இருக்கிறார். இந்தப் படத்தில் ஓவியா, வேதிகா ஆகிய 2 கதாநாயகிகளுடன் 3வதாக நிக்கி தம்போடி என்ற நாயகியும் இணைந்துள்ளார். காஞ்சனா 3 படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் ஏப்ரல் 19-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த கலாநிதிமாறன் ராகவா லாரன்ஸை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.