ராகவா லாரன்ஸ் தொடர்ந்து இயக்கி நடிக்கும் முனி4

ராகவேந்திரா புரொடக்க்ஷன் சார்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள முனி அலைஸ் காஞ்சனா படத்தின் வரிசையில் தற்போது முனி-4 உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக ஓவியா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடித்துள்ளது. இதனை அடுத்து அவர் “கால பைரவா” படத்தை துவங்க உள்ளார். இதனை அடுத்து இன்னும் இரு கதைகள் தேர்வு செய்து வைத்திருப்பதாகவும், இது பற்றிய அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.