ராஜபாண்டியன் கேரக்டருக்கு விஜய்சேதுபதி தான் வேண்டுமென்று கேட்டேன் – மெகா ஸ்டார் சிரஞ்சீவி !

'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் வேளையில் வீடே பரபரப்பாகி இருந்தவர் நமக்காக சில மணித்துளிகள் நம்மிடையே, 'சைரா நரசிம்ம ரெட்டி' கதையைப் படமா எடுக்கணும்கிறது 12 வருஷ பிளான். பெரிய பட்ஜெட் தேவைப்பட்டதால தள்ளித்தள்ளிப் போயிட்டே இருந்துச்சு. இடையில் நான் அரசியலுக்குப் போனதால் ஒன்பது வருஷமா நடிக்கவேயில்லை. மீண்டும் நான் சினிமாவுக்கு வந்தப்போ என்னோட 150-வது படத்துக்காக நிறைய கதைகள் கேட்டேன். ஆனா, எதுவும் எனக்குத் திருப்தியா இல்லை. அப்போதான் நான் விஜய் நடிச்ச 'கத்தி' படத்தைப் பார்த்தேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. 'உங்களோட ரீ என்ட்ரி படத்தை நான்தான் தயாரிக்கணும்'னு என் மகன் ராம்சரண் 'கைதி நம்பர் : 150' படத்தைத் தயாரிச்சான். படம் சூப்பர் ஹிட். அடுத்து 'சைரா நரசிம்ம ரெட்டி' கதையைப் பண்ணலாம்னு நம்பிக்கை வந்துச்சு. இந்த நம்பிக்கைக்குக் காரணம் 'பாகுபலி'யோட வெற்றிதான். 'இதைப் படமா எடுத்தா 250 கோடி முதல் 300 கோடி வரை செலவாகும். நாமே படத்தை தயாரிப்போம் என என் மகன் ராம்சரன் தேஜா முடிவுசெய்தார். இயக்குனராக சுரேந்தர் ரெட்டியை தேர்வு செய்தோம். நரசிம்மரெட்டி வாழ்க்கையில அவருக்கு ஆதரவா தமிழ் நாட்டுல இருந்து ராஜபாண்டின்னு ஒரு வீரன் தன்னுடைய படையுடன் வந்து ஆங்கிலேயருக்கு எதிரா சண்டை போட்டிருக்கான். அந்த கேரக்டர்லதான் விஜய் சேதுபதி நடிச்சிருக்கார். இந்த ராஜபாண்டி கேரக்டர்ல யார் நடிக்கலாம்னு பேச்சு வந்தப்போ நான்தான் விஜய் சேதுபதி பேரைச் சொன்னேன். அவர் தமிழ்ல எவ்ளோ பிஸியா நடிச்சிட்டிருக்கார்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனாலும், அவர்கிட்ட கேட்கலாம்னு தோணுச்சு. போன் அடிச்சேன். 'ராஜ பாண்டின்னு ஒரு கேரக்டர். நீங்க நடிச்சா நல்லாருக்கும்னு நினைக்கிறேன்'னுதான் சொன்னேன். 'உங்க படத்துல நடிக்கிறது எனக்குப் பெருமை சார். நிச்சயமா வந்து நடிக்கிறேன்'னு சொன்னார். விஜய் சேதுபதி சிம்பிள்னு தெரியும். ஆனால், இவ்ளோ ஹம்பிளான மனிதர்னு அன்னைக்குத்தான் தெரிஞ்சிக்கிட்டேன். ஜார்ஜியாவுல ஷூட்டிங் நடக்கும்போது நாங்க தங்கியிருந்த ஹோட்டலுக்குப் பெரிய ரசிகர்கள் கூட்டமே வரும். முக்கால்வாசிப்பேர் விஜய் சேதுபதியைப் பார்க்க வந்திருந்தவங்க. திறமையான நடிகர்கள் வரிசையில கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக நான் விஜய் சேதுபதியைப் பார்க்குறேன். விஜய் சேதுபதி என் தம்பி. என் தம்பிகூட நடிச்சதுல எனக்குத்தான் பெருமை என சிரஞ்சீவி கூறினார்.