ராஜமவுலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நித்தியா மேனன் !

பாகுபலி 2 படத்தை அடுத்து எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கி வரும் படம் ஆர்.ஆர்.ஆர். ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் தேஜா என்று இரண்டு ஹீரோக்கள். இதில் ராம் சரண் தேஜாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிக்கிறார். இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸ் படத்தில் இருந்து வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக நித்யா மேனனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நச்சென்று நடித்துக் கொடுப்பார் நித்யா.