ராஜமவுலி படத்திலிருந்து லண்டன் நடிகை விலகல் !

ராஜமவுலி அடுத்து இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா நடிக்கிறார்கள். இந்த படத்தில் ராம் சரண் தேஜாவுக்கு ஜோடியாக அலியா பட் நடிக்கிறார். ஜூனியர் என்டிஆர் ஜோடியாக நடிக்க லண்டனை சேர்ந்த மாடல் அழகி டெய்சி எட்கர் ஜோன்ஸ் ஒப்பந்தமானார். இந்நிலையில் கால்ஷீட் பிரச்னையால் படத்திலிருந்து விலகிவிட்டதாக தெரிகிறது, அவருக்கு ஆங்கில படமொன்றில் வாய்ப்பு கிடைத்திருப்பதால் இதிலிருந்து விலகிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் டெய்சி கூறும்போது, தனிப்பட்ட காரணங்களால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போயிருக்கிறது. ராஜமவுலியின் பிரமாண்ட படத்தில் நடிக்க முடியாமல் போனது வருத்தம் தருகிறது என கூறியுள்ளார்.