ராஜமவுலி படத்தில் பரினீதி சோப்ரா பதில் சாய் பல்லவி !

வரலாற்றுக் கதைகளை பிரம்மாண்டமாக படைக்கும் ராஜமவுலி பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடிய அல்லுரி சீதாராம ராஜு, கொமரம் பாபு ஆகியோரின் கதையை, சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆர்.ஆர்.ஆர் என்ற பெயரில் இயக்கி வருகிறார். ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக இங்கிலாந்தை சேர்ந்த டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் என்ற நடிகை நடித்து வந்த வேளையில் திடீரென்று படத்திலிருந்து விலகினார். எனவே அவரது கதாபாத்திரத்தில் யாரை நடிக்கவைப்பது என்பது இன்னும் உறுதியாகாமல் உள்ளது. பரினீதி சோப்ரா அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சாய் பல்லவியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.