ராஜமௌலிக்காக ஓகே சொன்ன அனுஷ்கா!

நடிகை அனுஷ்கா – பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'பாகுபலி'. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ராஜமௌலி, இரண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்து வரும் 'ஆர் ஆர் ஆர்' படத்தில், மூன்று நிமிடம் மட்டுமே வர கூடிய, சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த காட்சி இடைவேளைக்கு முன் வருகிறதாம். மூன்று நிமிட காட்சி என்றாலும் பரவாயில்லை என ராஜமௌலிக்காக நடிக்க ஒப்புக்கொண்டாராம் அனுஷ்கா.