ராஜராஜ சோழன் விவகாரம் : இயக்குனர் பா.ரஞ்சித்தை வரும் 19ம் தேதி வரை கைதுசெய்ய தடை
இயக்குனர் பா ரஞ்சித், தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு அவர் பேசிய விஷயம், தற்போது அவரை கோர்ட் படியேறும் நிலைக்கு கொண்டுவந்துள்ளது. மன்னர் ராஜராஜசோழன்தான் மக்களிடம் உள்ள நிலத்தை அபகரித்தவர். அவரது ஆட்சியிலிருந்துதான் ஜாதி பிழவு கட்டமைக்கப்பட்டது. தேவதாசி முறை அவர்கள் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. தற்போது ராஜராஜ சோழன் எங்களின் ஜாதிக்காரர் என்று 8 ஜாதிக்காரர்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள். ராஜராஜ சோழன் ஆட்சிதான் இருப்பதிலேயே இருண்ட ஆட்சி என்று நான் சொல்வேன்” என்று இயக்குனர் ரஞ்சித் பேசியிருந்தார்.ரஞ்சித்தை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்று கருத்து ஒலிக்க தொடங்கிய நிலையில், அவர் முன்ஜாமின் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது. ரஞ்சித்திற்கு முன்ஜாமின் வழங்க, அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், ரஞ்சித்தை வரும் 19ம் தேதி வரை, போலீசார் கைது செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தடைவிதித்தனர்.