ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை – கமல் 60 சுவாரசியம் !

சமீப காலங்களில் கமலின் ராஜ்கமல் நிறுவனம் அதிக லாபம் சம்பாதித்த நிகழ்வாக ‘கமல் 60’ நடந்து முடிந்திருப்பதாக திரையுலக பிரபலங்கள் தெரிவிக்கிறார்கள். இந்நிகழ்வில் மட்டும் அனைத்து செலவுகளும் போக அந்நிறுவனம் சுமார் 5 கோடிக்கும் மேல் லாபம் சம்பாதித்திருப்பதாகத் தெரிகிறது. கமல் பிறந்தநாள் விழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி நேற்று நேரு உள் விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது டிக்கெட் விலை 999 முதல் 50 ஆயிரம் வரை இருந்ததால் அரங்கம் நிரம்புவது சந்தேகம் என்றே பலரும் எதிர்பார்த்தனர் ஆனால் ’ராஜா கைய வச்சா அது ராங்காப் போனதில்லே’என்ற சூப்பர் ஹிட் பாடலுக்கு கட்டியம் கூறுவதுபோல் அரங்கம் நிரம்பி வழிந்தது. இத்தனைக்கும் இம்முறை விஜய் தொலைக்காட்சி இலவச பாஸ்களுக்கு முற்றிலும் தடைபோட்டிருந்தது. காரணம் கமல் 60 நிகழ்ச்சியின் தொலைக்காட்சி உரிமைக்கு விஜய் டிவி கொடுத்திருந்த மிகப்பெரிய விலை. இந்நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்காக சுமார் மூன்றரை கோடியை ராஜ்கமல் நிறுவனத்துக்குக் கொடுத்து இந்த உரிமையைப் பெற்றிருக்கிறதாம் விஜய் தொலைக்காட்சி.