Cine Bits
ராஜேஷ் இயக்கத்தில் ஹிப் பாப் தமிழா ஆதி !

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மிஸ்டர் லோக்கல். ராஜேஷ் இயக்கிய இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது கடந்த மே மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் ராஜேஷ் இயக்கும் அடுத்த படத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் இபடத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம். ஹிப்ஹாப் ஆதி ஏற்கனவே மீசைய முறுக்கு, நட்பே துணை போன்ற படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடித்தாலும் இசை அமைப்பதிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.