ராஞ்சனா இயக்குனருடன் மீண்டும் பாலிவுட்டிற்கு செல்லும் தனுஷ் !

2013 -ல் ராஞ்சனா என்ற ஹிந்தி படத்தில் நடித்தார் தனுஷ்.படம் அபார வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து ஷமிதாப் படத்தில் நடித்தார். படம் படு தோல்வியடைந்தது.மீண்டும் 5 வருட இடைவெளியில் ராஞ்சனா இயக்குனர் எல் ராய் இயக்கும் படத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக சாரா அலிகான் நடிக்கிறார். இதில் முக்கிய வேடத்தில் நடிக்க அக்ஷய்குமாருடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிகிறது. ஒரு பீகார் பெண்ணுக்கும் தென்னிந்திய இளைஞனுக்கும் இடையே நடக்கும் காதல் கதை என்கிறார்கள். மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்றுவருகிறது.