ராட்சசன் தெலுங்கு ரீமேக்கில் அனுபமா பரமேஸ்வரன்!

இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது தெலுங்கு படங்களில் நடித்து கொண்டிருக்கும் இவருக்கு தெலுங்கு திரையுலகில் மவுசு கூடியுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழில் சமீபத்தில் 'ராட்சசன்' திரைப்படம் வெளியானது இதில் விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் நடித்திருந்தனர்.  இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. இதனையடுத்து, இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதில் கதாநாயகியாக அனுபமா நடிக்கவுள்ளார்.