ராணாவுடன் இணையப்போகும் ஸ்ருதிஹாசன் !

தென்னிந்திய நடிகைகளில் சுருதிஹாசனுக்கு முதல் தடவையாக அமெரிக்க தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் தெலுங்கு நடிகர் ராணாவையும், இயக்குனர் பிரகாசையும் மும்பையில் சுருதிஹாசன் சந்தித்து பேசினார். அவர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன்மூலம் பிரகாஷ் இயக்கும் படத்தில் ராணா ஜோடியாக சுருதிஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்திலும் சுருதிஹாசன் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜனநாதன் இயக்குகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பில் சுருதிஹாசன் நடித்து முடித்துள்ளார்.