ராதாரவி ஒரு பெண்ணை மேடையில் அவமானப்படுத்துவது இது முதல் முறையல்ல: சாந்தனு பாக்யராஜ் !

நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய கடும் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர். ராதாரவியின் பேச்சு குறித்து சாந்தனு பாக்யராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ராதாரவி ஒரு பெண்ணை மேடையில் அவமானப்படுத்துவது இது முதல் முறையல்ல. இப்படி பல சம்பவங்கள் கவனிக்கப்படாமல் போயிருக்கின்றன. ஆனால், நயன்தாரா அற்புதமான பெண்மணி, ஏன் அதற்கும் அப்பாற்பட்டவர். அவரது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை வைத்தே அவரது வளர்ச்சியைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், சரியானவர்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.
இவ்வாறு சாந்தனு பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.