ராதா ரவி பேச்சுக்குக் கை தட்டியது ஏன்? பத்திரிகையாளர்கள் மீது பாயும் ஸ்ரீப்ரியா!

நயன்தாராவைப் பற்றி அவதூறாகப் பேசியபோது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள்தான் அவரது பேச்சை கைதட்டி ரசித்தனர் என நடிகை ஸ்ரீப்ரியா குற்றம்சாட்டியுள்ளார். அந்த விவகாரம் பற்றி ட்விட்டரில் பதிவிட்ட நடிகை ஸ்ரீப்ரியா, “பேச்சாளர்களுக்கு உள்ள கடமை, பார்வையாளர்களுக்கும் இருக்க வேண்டும். தவறான கருத்துக்கு கைதட்டி ஆதரவு கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும். இதனால், வாய்த்துடுக்கான விமர்சனங்கள் தவிர்க்கப்படும்” என்று கூறியுள்ளார்.