ராதிகாவின் டுவிட்டர் மீட்டெடுப்பு …

நடிகை ராதிகா திரையுலகம் சம்பந்தப்பட்ட மற்றும் பொது பிரச்சனைகளில் அவ்வப்போது ராதிகாவின் குரல் டுவிட்டர் பக்கம் மூலமாக ஒலிப்பது வழக்கம். அவர் தனக்கு பிடிக்காத நபரை நக்கலாக வசைபாட அவர் டுவிட்டரை பயன்படுத்தி வந்தார். அவரது டுவீட்டர் கணக்கு திடீரென மார்ச் 11 ஆம் தேதி முடக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றுமுதல் அவரது கணக்கு மீண்டும் உயிர்பெற்றுள்ளது. “என்னுடைய டுவிட்டர் கணக்கு மீட்டெடுக்கபட்டது. நான் திரும்பி வந்துட்டேன்” என சந்தோஷத்துடன் குறிப்பிட்டுள்ளார்.