ராதிகாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் !

இந்தியாவின் புகழ்பெற்ற ஷோ கோன் பனேகா குரோர்பத, 14 கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தால் ஒரு கோடி பரிசு வழங்கப்படும். ஸ்டார் டீவி குழுமம் நடத்திய இந்த ஷோ ஹிந்தியில் பல சீன்களை ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடத்திவந்தார். இதே நிகழ்ச்சி தமிழில் சரத்குமார், சூர்யா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் தொகுத்துவழங்கினார்கள். இப்போது இதே கான்செப்டில் கலர்ஸ் தமிழ் சானலில் ஒளிபரப்பாகவிருக்கிறது. பேர்கள் மட்டுமே பங்கேற்கும் இந்நிகழ்ச்சியை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்துழங்கவிருக்கிறார். தற்பொழுது இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ராதிகாவை அமிதாப் பச்சன் பாராட்டியுள்ளார். ராதிகா ஜி நான் அமிதாப் பச்சன் கோடீஸ்வரன் நிகழ்ச்சி ஏன் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கிறது. சில காரணங்களால் அதை தொடர்ந்து நடத்த முடியவில்லை. நீங்கள் நடத்தும் கோடீஸ்வரன் நிகழ்ச்சி பற்றி கேள்விப்பட்டேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பெண்கள் மட்டும் பங்கேற்கும் நிகழ்ச்சி பெண் நடத்தும் நிகழ்ச்சி என்பது தேசிய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் புதுமையான ஒன்றாகும். உங்களுக்கும் பங்கேற்கும் அணைத்து பெண்களுக்கு எனது வாழ்த்துக்கள். என அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.