ராதிகா, வரலக்ஷ்மிக்கு விஷால் பதிலடி !
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில் நாசர் தலைமையில் போட்டியிட்ட பாண்டவர் அணி இந்த தேர்தலிலும் போட்டியிடுகிறது. இவர்களை எதிர்த்து பாக்யராஜ் தலமையில் ஐஷரி கணேஷ், பிரசாந்த், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட நடிகர்கள் சுவாமி ஷங்கரதாஸ் அணி என்ற பெயரில் போட்டியிடுகின்றனர். இந்த இரு அணிகளும் கடுமையான போட்டியுடன் மோதுகின்றனர். பாண்டவர் அணி சார்பில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் பதவியை தவறாக பயன்படுத்தினரென்றும், நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறோம் என்றெல்லாம் சொல்லப்பட்டிருந்தது. இதற்கு வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர். அவர்கள் இருவரின் கண்டனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். முந்தையத் தேர்தலில் நாங்கள் என்ன செய்யவில்லை என்று ராதிகா பேசினார். அதற்கான பதில் தான் அந்த வீடியோ. சும்மா ஏவி விடுவதற்கான வீடியோ அல்ல. நாங்கள் என்ன செய்தோமோ அதை வீடியோவில் காட்டியுள்ளோம். தண்டனை செய்திருந்தால் சட்ட ரீதியாக தண்டனை விதிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தோம். அதைத்தான் செய்தோம். என்ன நடந்தது, என்ன செய்தோம் என்பது தான் அந்த காட்சி அதிலொன்றும் தவறில்லை எனக்கூறியுள்ளார்.