Cine Bits
ராம் கோபால் வர்மாவின் லட்சுமி என்டிஆர் படத்துக்கு சிக்கல்!
லட்சுமியின் என்டிஆர் என்ற படத்தை தெலுங்கில் எடுத்தும் முடித்துவிட்டார் வர்மா. இதில் என்டிஆருக்கும் அவரது மனைவி லட்சுமிக்கும் இடையிலான வாழ்க்கையை பற்றி படமாக்கியுள்ளாராம். அதில் ஏராளமான சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளன. படத்தை பார்த்த சென்சார் போர்டு பல இடங்களில் காட்சிகளை வெட்ட வேண்டும், குறிப்பிட்ட காட்சிகளில் வசனங்களை மியூட் செய்ய வேண்டும் என கூறியுள்ளது. அப்போதுதான் சான்றிதழ் கொடுக்க முடியும் என கறாராக சொல்லிவிட, குறிப்பிட்ட காட்சிகளை வெட்ட வர்மா தயாராகிவிட்டாராம்.