ரிலீஸ் ஆனது தெலுங்கு 96 ட்ரெய்லர் – ஜானுவாக தேறுவாரா சமந்தா ?

2018-ல் வெளிவந்த மிக சிறந்த படங்களுள் திரிஷா, விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த 96. அறிமுக இயக்குனர் பிரேம்குமார் இயக்கி மாபெரும் வெற்றியடைந்தது. தமிழில் இப்படத்தை இயக்கிய பிரேம்குமார் தெலுங்கிலும் இயக்குகிறார். விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சர்வானந்த் மற்றும் திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். ஜானு என்ற பெயரில் தெலுங்கில் டீசர் நேற்று வெளியாகியுள்ளது. அதற்குள் 22 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். படத்தில் திரிஷாவின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. விண்ணை தாண்டி வருவாயா படத்தி ஜெஸிஸி கதாபாத்திரத்திற்கு பிறகு த்ரிஷாவிற்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது ஜானு கதாபாத்திரம். இக்கதாபாத்திரத்தில் ஜானுவாகவே வாழ்ந்திருந்தார் திரிஷா. தெலுங்கில் இதே கதாபாத்திரத்தில் நடிக்கும் சமந்தா திரிஷா அளவிற்கு வரவேற்பை பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.