ரீஎன்ட்ரி கொடுக்க தயாராக இருக்கும் மைக் மோகன்

 நான் சோஷியல் மீடியாவுல இல்லை. ஆனா என்னோட ரசிகர்கள் ஃபேஸ்புக் பேஜ் வச்சிருக்காங்கன்னு கேள்விப்பட்ட போதே மகிழ்ச்சியா இருந்தது. அதுலயும் இன்றைய ஜெனரேஷன்லயும் என்னோட படங்களை ரசிக்கறாங்கன்னு கேள்விப்பட்டப்போ நான் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லை. ன்னோட ரீ என்ட்ரி பத்தியும் ரசிகர்கள் ஆவலா இருக்காங்க. அன்னைக்கும் சரி; இன்னைக்கும் சரி, நான் நல்ல கதை, இயக்குநர், தயாரிப்பு நிறுவனமான்னு பார்த்துட்டுதான் படங்கள் பண்ணினேன். என்னைப் பொறுத்தவரை ஹீரோவா வில்லனாங்கிறது முக்கியமில்லை. மார்க்கெட்ல 'சேலபிள் ஸ்டாரா' இருந்தபோதே வில்லன் ரோல் பண்ணியிருக்கேன். அதனால இப்போதும் நல்ல யூனிட் அமைஞ்சு வில்லன் ரோல் கிடைச்சா டபுள் ஓ.கே.தான். அப்படி சில முயற்சிகள் நடந்திட்டிருக்கு. அந்தப் படங்கள் நடக்குமாங்கிறதைப் பொறுத்திருந்துதான் பார்க்கணும்'’ என முடித்துக் கொண்டார், மோகன்.