ரீ என்ட்ரிக்கு தயாராகும் அசினின் அசத்தல் புகைப்படம் !

கஜினி நாயகி அசின் முற்றிலுமாக ஆளே மாறிப்போய் இது அசின்தானா என்று சந்தேகப்படும் அளவுக்கு தோற்றத்தை மாற்றியிருக்கிறார். தனது இன்ஸ்டாகிராமில் இப்படத்தை பகிர்ந்தும் இருக்கிறார். கமல், விஜய், அஜீத் என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வந்த அசின் திடீரென்று இந்தியில் நடிக்கச் சென்றார். இந்தியில் ரீமேக் ஆன கஜினி படத்தில் ஆமிர் கானுடன் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார். ஐந்தாறு படங்களில் மட்டுமே இந்தியில் நடித்துவிட்டு தொழில் அதிபர் ராகுல் ஷர்மாவை மணந்துகொண்டு இல்லறத்தில் செட்டிலனாதுடன் பெண் குழந்தைக்கு தாய் ஆனார். இனிமேல் நடிக்க வரமாட்டார் என்று ரசிகர்கள் முடிவு செய்திருந்த நிலையில் அவர் மீண்டும் நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தை, கணவருடன் இருக்கும் படங்களை அவ்வப்போது பகிர்ந்து வரும் அசின் சில தினங்களுக்கு முன் ஒரு படத்தை பகிர்ந்தார். அவரது ஹேர் ஸ்டைல், உடல்தோற்றம், முகச்சாயல் எல்லாமே மாறிப்போயிருக்கிறது. இப்படம் நெட்டில் டிரெண்டாகி உள்ளது. ரீஎன்ட்ரிக்கு தயாராகி இருக்கும் அசினை விரைவில் இந்தி படத்தில் பார்க்கலாம், தமிழ் படத்திலும் அவருக்கு வாய்ப்புகள் காத்திருக்கிறது.