ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கும் லட்சுமி மேனன் !

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘கும்கி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை லட்சுமி மேனன் கடைசியாக விஜய் சேதுபதியுடன் ‘றெக்க’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதற்குப் பின் அவர் நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.  இந்நிலையில் இயக்குநர் முத்தையா இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த கொம்பன், சசிகுமாரின் குட்டிப் புலி ஆகிய படங்களில் லட்சுமி மேனன் நாயகியாக நடித்திருந்தார். கவுதம் கார்த்திக்குடன் சிப்பாய் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த லட்சுமி மேனன், தற்போது மீண்டும் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.